மேற்கு வங்கத்தில் வங்காள இலக்கிய துறையில் சிறப்பான பங்களிப்பை அளிப்பவர்களுக்கு, பஷ்சிம்பங்க வங்காள அகாடமி வருடா வருடம் விருது வழங்கி கவுரவித்து வருகிறது. இதை மேற்கு வங்க கல்வித்துறை அமைச்சர் பிரத்யா பாசு தலைமை தாங்கி நடத்தி வருகிறார். அந்த இயக்கம் மூலம் மம்தா பானர்ஜி எழுதிய 900 கவிதைகளின் தொகுப்பான ‘கபிதா பென்’ புத்தகத்தை பாராட்டி, சிறப்பு இலக்கிய விருது வழங்கப்படுவதாக அறிவிப்பு செய்யப்பட்டிருந்தது. மேலும் இந்த விருதை மம்தா சார்பில், அமைச்சர் பிரத்யா பாசு பெற்றும் கொண்டார்.
இந்நிலையில், மம்தாவுக்கு விருது வழங்கியதற்கு பிரபல எழுத்தாளரும், நாட்டுப்புற கலாசாரம் குறித்து ஆராய்ச்சி செய்பவருமான ரத்னா ரஷீத் பானர்ஜி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளதுடன், தனக்கு வழங்கப்பட்ட விருதையும் திருப்பி அளிக்கப் போவதாக அறிவித்துள்ளார்
இது தொடர்பாக அவர் அளித்துள்ள பேட்டியில்”
எனக்கு வழங்கப்பட்ட விருதை உடனடியாக திரும்ப கொடுப்பதைப் பற்றி நான் கடிதத்தில் தெரிவித்துள்ளேன். மம்தாவுக்கு இலக்கியத்திற்கான விருது கொடுக்கப்பட்டது, எழுத்தாளர் என்ற முறையில் எனக்கு மிகுந்த அவமானமாக உள்ளது. இது தவறான முன்னுதாரணத்தை ஏற்படுத்தும். மம்தா குறித்த அகாடமியின் புகழுரை, உண்மைக்கு புறம்பானது. அரசியலுக்கு செய்த பங்களிப்பையும், இலக்கியத்திற்கு செய்த பணியையும் ஒப்பிடக்கூடாது. இந்த விருதை மம்தா ஏற்றிருக்கக்கூடாது”, என்று தெரிவித்தார்.