இசைஞானி இளையராஜாவின் பிறந்தநாள்; வாழ்த்துக்கள் தெரிவித்த முதல்வர் விஜய், நன்றி கூறிய ராஜா

இசை இந்தியா கடந்த நிகழ்ச்சிகள் கலை / கலாச்சாரம் சினிமா சின்னத்திரை செய்திகள் தமிழ்நாடு நிகழ்வுகள் பொழுதுபோக்கு மற்றவை முதன்மை செய்தி

இசை ஜாம்பவான் இளையராஜாவின் பிறந்த நாளையொட்டி முதலமைச்சர் விஜய் அவருக்கு வாழ்த்து தெரிவித்து இருந்தார்.
முதலமைச்சரின் வாழ்த்து செய்தியில் “இசைஞானி இளையராஜா அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்.
தேனி மாவட்டம், பண்ணைப்புரம் என்ற கிராமத்தில் பிறந்து, தனது சகோதரர்களுடன் இசைப் பயணத்தைத் தொடங்கி, “அன்னக்கிளி” என்ற திரைப்படத்தின் மூலமாக திரைத்துறையில் கால்பதித்து, உலகப் புகழ்வாய்ந்த சிம்பொனி இசை வரை பல சாதனைகளைப் படைத்து, இசை உலகின் மகுடமாகத் திகழ்ந்துவரும் இசைஞானி இளையராஜா அவர்கள் தமிழ்நாட்டிற்குப் பெருமை சேர்த்து வருகிறார்.
உங்கள் இசை இன்னும் பல தலைமுறைகளுக்கு வழிகாட்டும் ஒளியாகவும், ஊக்கமாகவும் தொடர்ந்து ஒலிக்கட்டும். தமிழர்களின் பெருமையாக விளங்கும் தங்களுக்கு எங்களின் அன்பும், மரியாதையும் கலந்த இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்” என்று தெரிவித்து இருந்தார்.
இந்த நிலையில் முதலமைச்சர் விஜய்க்கு, இளையராஜா நன்றி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக இளையராஜா குரல் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *