”கோவிட்-19 இன் ஓமிக்ரான் மாறுபாடு வேகமாகப் பரவி வருவதால், ஏற்கனவே டெல்டா மாறுபாட்டால் பாதிக்கப்படைந்த சுகாதாரப் பாதுகாப்பு அமைப்பு மீண்டும் பாதிப்புக்குள்ளாகிறது, இதனால் இந்த குளிர்காலத்தில் அமெரிக்காவில் கடுமையன சூழல் நிலவக்கூடும்” என்று டாக்டர் அந்தோனி ஃபௌசி நேற்று தெரிவித்தார். “கோவிடின் தாக்கம் மீண்டும் ஆக்கிரமித்துக்கொள்ளும்,” என்று ஃபௌசி CNN இன் “ஸ்டேட் ஆஃப் தி யூனியன்” இல் கூறினார், அமெரிக்கர்களை தடுப்பூசி போடவும், அவர்களின் பூஸ்டர் ஷாட்களைப் பெறவும் வலியுறுத்தினார்.
தனித்தனியாக, மசாசூசெட்ஸின் சென்ஸ் எலிசபெத் வாரன், நியூ ஜெர்சியின் கோரி புக்கர் மற்றும் கொலராடோவின் பிரதிநிதி ஜேசன் க்ரோ ஆகியோர் கொரோனா வைரஸ் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டனர் என்று அவர்களின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் கணக்குகளில் நேற்று பதிவிடப்பட்ட ட்வீட்கள் தெரிவிக்கின்றன.
க்ரோ தனது ட்வீட்டில், அவர் உக்ரைனுக்கு காங்கிரஸின் பிரதிநிதிகளின் அதிகாரப்பூர்வ பயணம் சென்று திரும்பி வந்து, கோவிட் தொற்றுக்கான பரிசோதனைக்கு உள்ளானதாக குறிப்பிட்டுள்ளார்.
ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த இம்மூவருக்கும் தடுப்பூசி போடப்பட்டு பூஸ்டர் டோஸ் அளிக்கப்பட்ட பின்பும் லேசான அறிகுறிகள் தென்பட்டிருபதாகக் கூறப்படுகிறது. தனிமைப்படுத்தப்படும் முன்பு வாரன் கடந்த வாரம் செனட் தளத்திற்குச் சென்றுள்ளார்.
கோவிட் அதன் மூன்றாம் ஆண்டிற்குள் நுழையும் இவ்வேளையில் , அமெரிக்கா இப்போது மீண்டும் ஒரு கொரோனா வைரஸை எதிர்கொள்கிறது. ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகத்தின் தரவுகளின்படி சனிக்கிழமை நிலவரப்படி ஒரு நாளைக்கு சராசரியாக 126,967 புதிய கோவிட் வழக்குகள் பதிவாகியுள்ளன. உலக சுகாதார அமைப்பின் கூற்றுப்படி, ஒமிக்ரான் பாதிப்பு ஒவ்வொரு மூன்று நாட்களுக்கு ஒருமுறை இரட்டிப்பாகிறது.