கர்நாடக அரசியலில் முக்கிய மாற்றமாக, முதல்வர் சித்தராமையா இன்று தனது பதவியை ராஜினாமா செய்தார். மக்கள் மாளிகைக்கு நேரில் சென்ற அவர், தனது ராஜினாமா கடிதத்தை ஆளுநரின் சிறப்பு செயலாளர் பிரபு ஷங்கரிடம் வழங்கினார்.முதல்வர் மாற்றம் குறித்து டெல்லியில் மே 26ஆம் தேதி முக்கிய ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, துணை முதல்வர் டி.கே. சிவகுமார் உள்ளிட்ட பல முக்கிய தலைவர்கள் கலந்து கொண்டனர்.கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின் அடிப்படையில், சித்தராமையா தனது பதவியை ராஜினாமா செய்ய ஒப்புக்கொண்டதாக கூறப்படுகிறது. இன்று மாலை 3 மணியளவில் அவர் மக்கள் மாளிகைக்கு வந்தார். அவருடன் துணை முதல்வர் டி.கே. சிவகுமார் மற்றும் அமைச்சர்கள் பரமேஸ்வரா, பிரயங்க் கார்கே ஆகியோரும் வந்திருந்தனர்.ஆளுநர் அப்போது இல்லாத காரணத்தால், அவரது சிறப்பு செயலாளரிடம் ராஜினாமா கடிதம் வழங்கப்பட்டது. கர்நாடக அரசியலில் இந்த மாற்றம் அடுத்த கட்ட அரசியல் சூழ்நிலைக்கு முக்கிய திருப்பமாக பார்க்கப்படுகிறது.

