குவைத் நாட்டில் வீட்டு பணிப்பெண் வேலைக்கு ஆள் தேவையென தமிழக அரசின் வெளிநாட்டு மனிதவள நிறுவனம் (Overseas Manpower Corporation Limited) அறிவிப்பை வெளியிட்டுக்கிறது. 500 பணிப்பெண் வேலைக்கான காலியிடங்கள் இருப்பதாக அறிவித்துள்ளது. இதற்கான தகுதிகளாக வயது வரம்பு குறைந்தட்சம் 30 முதல் 40 வயது வரை இருக்கலாம். கல்வித்தகுதி பத்தாம் வகுப்பு பபடித்திருக்க வேண்டும்.
நேர்முகத் தேர்வு மூலம் ஆட்கள் தேர்வு செய்யப்படுவார்கள். சம்பளம் 29,000 முதல் 32,000 வரை வழங்கப்படும். இதற்கு விண்ணப்பிக்க கடைசி நாள் மார்ச் 31, 2023. Www.Omcmanpower.com என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் ஆன்லைன் மூலமாகவும் விண்ணப்பிக்கலாம். நேர்முகத் தேர்வு நடக்கும் தேதி பின்னர் அறிவிக்கப்படும். இந்த நேர்முகத் தேர்வு OMCL கிண்டியில் உள்ள அலுவலகத்தில் நடைபெறும்.