மறைந்த தேமுதிக தலைவர் நடிகர் விஜயகாந்த் உருவத்தை பச்சை குத்திக் கொண்ட பிரேமலதா; இணையத்தில் பரவும் புகைப்படம்

அரசியல் அழுகு குறிப்புக்கள் இந்தியா கடந்த நிகழ்ச்சிகள் சினிமா செய்திகள் தமிழ்நாடு நிகழ்வுகள் மற்றவை முதன்மை செய்தி

தேமுதிக தலைவர் விஜயகாந்த் மறைந்து விண்ணுக்கு சென்றாலும், அவரை எப்போதும் பார்த்துக் கொண்டே இருக்க வேண்டும் என்பதற்காக கட்சியின் பொதுச்செயலாளர் பிரேமலதா வலது கையில் விஜயகாந்த்தின் உருவத்தை டாட்டூவாக வரைந்துள்ளார்.
தேமுதிக தலைவர் விஜயகாந்த் டிசம்பர் 28ஆம் தேதி காலமான நிலையில் அவரது உடல் அடக்கம் செய்யப்பட்ட கோயம்பேடு தேமுதிக தலைமை அலுவலகத்தில் பலரும் அஞ்சலி செலுத்தி வருவதுடன் பிரேமலதாவுக்கு நேரில் ஆறுதலும் கூறி வருகின்றனர்.
ஜனவரி 24ஆம் தேதி நடந்த விஜயகாந்த் படத்திறப்பு நிகழ்வில் வள்ளல் விஜயகாந்த் மெமோரியல் அன்னதானம் ட்ரஸ்ட் என்ற பெயரில் அறக்கட்டளை தொடங்க உள்ளதாக பிரேமலதா அறிவித்திருந்தார்.
இந்நிலையில் தனது கணவர் விஜயகாந்த்தின் உருவத்தை தன்னுடைய வலது கையில் டாட்டூவாக வரைந்துள்ளார் பிரேமலதா. அழகாக வரையப்பட்டுள்ள விஜயகாந்தின் உருவம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்து வருகிறது. பிரேமலதாவின் நெஞ்சில் குடிக்கொண்டிருக்கும் விஜயகாந்த் இனிமேல் அவரது கையிலும் வீற்றிருப்பார் என தேமுதிக தொண்டர்கள் பெருமிதம் கொள்கின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *