4 நாட்கள்அரசுமுறை பயணமாக வளைகுடா நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப், சவூதி அரேபியா, கத்தார் ஆகிய நாடுகளுடன் மிகப்பெரிய தொகைக்கான வர்த்தக ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளார். அமெரிக்காவின் போயிங் நிறுவனத்திடம் இருந்து 160 ஜெட் விமானங்களை வாங்கும் ஒப்பந்தத்தில் கத்தார் அரசு கையெழுத்திட்டுள்ளது. முன்னதாக அமெரிக்காவில் ரூபாய் 51 லட்சம் கோடி முதலீடு செய்வதாக சவூதி அரேபியா கூறியது. இது வரும் மாதங்களில் சுமார் ரூபாய் 85 லட்சம் கோடியாக உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் சவூதி இளவரசர் முகமது பின் சல்மான் தெரிவித்துள்ளார். இதை தவிர, சவூதி அரேபியாவுக்கு ரூபாய் 12 லட்சம் கோடி மதிப்பிலான போர் விமானங்கள் உள்ளிட்ட ஆயுத தளவாடங்களை விற்கவும் முடிவாகியுள்ளது. அமெரிக்கா மேற்கொண்ட மிகப்பெரிய பாதுகாத்துறை ஒப்பந்தம் இது என வெள்ளை மாளிகை கூறியுள்ளது. அதிபர் ட்ரம்ப் தனது சவூதி அரேபியா, கத்தார் நாடுகளில் ஈர்த்த முதலீடுகளின் மொத்த மதிப்பு தமிழகத்தின் ஒட்டுமொத்த பொருளாதார மதிப்பை விட 4 மடங்கு அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.

