ஈரானின் புதிய உச்ச தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ள மொஜ்தபா கமேனிக்கு ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதின் வாழ்த்து தெரிவித்துள்ளார். இந்த பதவியை ஏற்றுக்கொண்டதற்காக அவர் வாழ்த்து தெரிவித்ததுடன், எதிர்காலத்திலும் ஈரானுக்கு ரஷ்யா முழுமையான ஆதரவை வழங்கும் என்று புதின் உறுதியளித்துள்ளார். மேலும், இரு நாடுகளுக்கிடையிலான நட்பு மற்றும் ஒத்துழைப்பு தொடர்ந்து வலுப்பெறும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.ரஷ்யா மற்றும் ஈரான் கடந்த சில ஆண்டுகளாக பாதுகாப்பு, வர்த்தகம் மற்றும் எரிசக்தி உள்ளிட்ட பல துறைகளில் நெருங்கிய உறவை பேணி வருகின்றன. மேற்கத்திய நாடுகளின் தடைகள் எதிர்கொள்ளும் சூழலில், இந்த இரண்டு நாடுகளும் ஒருவருக்கொருவர் ஆதரவாக செயல்பட்டு வருகின்றன. மொஜ்தபா கமேனி உச்ச தலைவராக தேர்வு செய்யப்பட்டதைத் தொடர்ந்து, உலக நாடுகள் கவனம் செலுத்தி வருகின்றன. இதன் மூலம் மத்திய கிழக்கு பிராந்திய அரசியல் மற்றும் சர்வதேச உறவுகளில் புதிய மாற்றங்கள் ஏற்பட வாய்ப்பு இருப்பதாக அரசியல் நிபுணர்கள் கூறுகின்றனர்.

