95வது ஆஸ்கர் விருதுகள் வழங்கும் விழாவில், தமிழ் ஆவணப்படமான தி எலிஃபண்ட் விஸ்பரர்ஸ் இந்த ஆண்டு மார்ச் மாதத்தில் சிறந்த ஆவணப்பட குறும்படத்திற்கான விருதை வென்றது. இந்நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் செவ்வாய்க்கிழமை (மே 9) சிறப்பு நிகழ்வில் நிஜ வாழ்க்கை ஹீரோக்களான பொம்மன் மற்றும் பெல்லி தம்பதிகளான யானைப் பராமரிப்பாளர்களையும் ஆஸ்கார் விருது பெற்ற திரைப்பட தயாரிப்பாளர் கார்த்திகி கோன்சால்வ்ஸ் ஆகியோரையும் பாராட்டி விழா ஏற்பாடு செய்திருந்தது.
புதன்கிழமை (மே 10) டெல்லி கேபிடல்ஸுக்கு எதிரான போட்டிக்கு முன்னதாக, சென்னை சூப்பர் கிங்ஸ் யானையைப் பராமரிக்கும் தம்பதிகள் மற்றும் திரைப்படத் தயாரிப்பாளருக்கு சிறப்பு பாராட்டு விழாவை நடத்தியது.
யானைக் குட்டி ரகுவை வேட்டையாடுபவர்களிடமிருந்து பாதுகாத்து வளர்ப்பதற்கு தங்கள் உயிரை அர்ப்பணிக்கும் பொம்மன் மற்றும் பெல்லி என்ற மஹவுட் தம்பதிகள் பற்றியும்- ரகுவிற்கும் அவரது பராமரிப்பாளர்களுக்கும் இடையிலான விலைமதிப்பற்ற பிணைப்பின் கதையையும் தி எலிஃபண்ட் விஸ்பரர்ஸ்’ கூறுகிறது. இந்த திரைப்படத்தில் கார்த்திகி கோன்சால்வ்ஸ் இயக்குனராக அறிமுகமாகியுள்ளார்.
சூப்பர் கிங்ஸ் கேப்டனான எம்எஸ் தோனியைப் படக்குழுவினர் சந்தித்துள்ளனர்.
நட்சத்திர கிரிக்கெட் வீரர் படத்தின் தயாரிப்பாளர்களை சந்தித்து அவர்களின் பெயர்கள் பின்புறத்தில் அச்சிடப்பட்ட சிஎஸ்கே (சென்னை சூப்பர் கிங்ஸ்) டி ஷர்ட்களை பரிசாக வழங்கினார். அணியின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், எம்.எஸ். தோனி பொம்மன் பெல்லி தம்பதிகளுடன் இருக்கும் படங்களை வெளியிட்டு, “எங்கள் இதயங்களை வென்ற படக்குழுவினருக்கு பாராட்டுக்கள்! ” என்ற செய்தியைப் பகிர்ந்துள்ளனர்.