நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள ஜெயிலர் படம் ஆகஸ்ட் 10 ஆம் தேதி இந்திய அளவில் பிரமாண்டமாக வெளியிடப்படவுள்ளது. சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள அனிருத் இசையமைத்துள்ளார்.
இந்தப் படத்தில் ரஜினிகாந்த்துடன் மோகன்லால், சிவராஜ்குமார், சுனில், ஜாக்கி ஷெராஃப், தமன்னா, ரம்யா கிருஷ்ணன், வசந்த் ரவி, யோகி பாபு உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இந்தப் படத்தில் முத்துவேல் பாண்டியன் என்ற ஜெயிலர் கதாப்பாத்திரத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ளார்.
சமீபத்தில் இந்தப் படத்தின் முதல் பாடல் நான்கு நாட்களில் வெளியாகும் என அனிருத் அண்ணாமலை ரஜினி ஸ்டைலில் அறிவித்திருந்தார். எப்பொழுதும் நெல்சன் படங்களில் பாடல்கள் வெளியாகும்போது அதற்கான புரமோ வெளியாவது வழக்கம்.
ஜெயிலர் படத்தின் பாடல் புரமோவுக்காக ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள். அதன் படி இந்தப் படத்தின் புரமோவுக்கான ப்ரோமோ வெளியாகியுள்ளது. அதில் அனிருத்துக்கு தொடர்ச்சியாக நெல்சனிடமிருந்து போன் வந்துகொண்டிருக்க, கோபமாக கட் செய்து, ப்ரோமோ வேணும்னு சொல்லுவான் என்கிறார். முதல் ப்ரோமோ நாளை மாலை 6 மணிக்கு வெளியாவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

