நடிகர் ‘கராத்தே’ ஷிஹான் ஹுசைனி காலமானார்.

ஆரோக்கியம் இந்தியா சிறப்பு சினிமா செய்திகள் தமிழ்நாடு விளையாட்டு

நடிகரும் கராத்தே மாஸ்டராக இருந்த ஷிஹான் ஹுசைனி இன்று காலமானார். 60 வயதான ஷிஹான் ஹுசைனி, கராத்தே மாஸ்டராக மட்டுமல்லாமல், விஜய் நடித்த பத்ரி உள்ளிட்ட பல படங்கள் மற்றும் பல முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார். அவர் வில்வித்தை பயிற்சியாளர், ஓவியர் மற்றும் சமையல் கலைஞராகவும் பன்முகத் திறன்களை கொண்டவர். 1986ஆம் ஆண்டு கே.பாலச்சந்தர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் வெளியான ‘புன்னகை மன்னன்’ என்ற திரைப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார். தற்போது, இரத்த புற்றுநோயால் பாதிக்கப்பட்ட அவர் இன்று (மார்ச் 25) உயிரிழந்தார்.வில்வித்தை பயிற்சியாளராக பரவலாக அறியப்படும் ஷிஹான் ஹுசைனியின் உடல்நலக் குறைபாட்டை கருத்தில் கொண்டு, தமிழக அரசு அவருக்கு மருத்துவ சிகிச்சைக்காக ரூ.5 லட்சம் நிதியுதவி வழங்கியுள்ளது. மேலும், அவர் அகில இந்திய வில்வித்தை சங்கத்தின் துணைத் தலைவர் மற்றும் தமிழ்நாடு வில்வித்தை சங்கத்தின் பொதுச் செயலராக பல்வேறு பொறுப்புகளில் வகித்தவர். மேலும் அவர் இறப்பதற்கும் சில நாட்கள் முன்பு தனது உடலை தானமாக வழங்கியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *