மகளிர் பிரிமியர் லீக் 2024; பரபரப்பான ஆட்டத்தில் 5 ரன்கள் வித்தியாத்தில் மும்பை அணியை வீழ்த்தி இறுதிப் போட்டியில் நுழைந்தது பெங்களூரு அணி

இந்தியா கடந்த நிகழ்ச்சிகள் செய்திகள் நிகழ்வுகள் மற்றவை முதன்மை செய்தி வரும் நிகழ்ச்சிகள் விளையாட்டு

5 அணிகள் பங்கேற்றுள்ள 2வது மகளிர் பிரீமியர் லீக் தொடர் இறுதி கட்டத்தை எட்டி உள்ளது. லீக் சுற்று முடிவில் முதலிடம் பிடித்த டெல்லி கேபிட்டல்ஸ் நேரடியாக இறுதி போட்டிக்கு தகுதி பெற்றது. மும்பை இந்தியன்ஸ் 2வது இடமும், ராயல்சேலஞ்சர்ஸ் பெங்களூரு 3வது இடமும் பிடித்து பிளே ஆப் சுற்றுக்கு நுழைந்தன. உ.பி. வாரியர்ஸ், குஜராத் ஜெயன்ட்ஸ் முறையே 4 மற்றும் 5வது இடத்தை பிடித்து வெளியேறின.இன்று இரவு 7.30 மணிக்கு டெல்லியில் நடைபெறும் எலிமினேட்டர் போட்டியில் நடப்பு சாம்பியனான ஹர்மன்பிரீத் கவுர் தலைமையிலான மும்பை இந்தியன்ஸ்-ஸ்மிருதி மந்தனா தலைமையிலான பெங்களூரு அணிகள் மோதுகின்றன. இரு அணிகளும் இதற்கு முன் மோதிய 4 போட்டியில் 3ல் மும்பை, ஒன்றில் பெங்களூரு வென்றுள்ளது. நடப்பு சீசனில் மோதிய போட்டியில் தலா ஒரு வெற்றி பெற்றுள்ளன. இன்று வெற்றி பெறும் அணி நாளை மறுநாள் பைனலில் டெல்லியுடன் மோதும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *