உக்ரைனிடமிருந்து ரஷ்யா ஆக்கிரமித்த கெர்சன் நகரில் இருந்து பொதுமக்கள் உடனடியாக வெளியேற ரஷ்ய அதிகாரிகள் உத்தரவு; உக்ரைன் ராணுவம் கடுமையான தாக்குதலை நடத்த வாய்ப்புள்ளதால் இந்த உத்தரவு
என தகவல்.
உக்ரைனின் கெர்சன் நகரில் உள்ள பள்ளி மீது உக்ரைன் படையினரே குண்டு போட்டு தாக்குதல் நடத்தியதாக ரஷ்ய அமைச்சகம் தெரிவித்துள்ளது. மேலும் இதில் பலர் சிக்கியிருக்கலாம். உயிர்ச்சேதம் குறித்த தகவல் ஏதும் அதிகாரப்பூர்வமாக வெளியாகவில்லை.
ரஷ்யாவில் அணு ஆயுத தளவாடங்களை அலர்ட்டாக இருக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. உக்ரைன் மீது அணு ஆயுத தாக்குதல் நடக்குமா என்ற அச்சம் நிலவுகிறது. நேட்டோ நாடுகள் அதிர்ச்சியில் உள்ளது.
உக்ரைனுக்கு ஆயுத உதவி வழங்கிய’ ஸ்வீடன் மற்றும் பின்லாந்து நாடுகள், நேட்டோ அமைப்பில் சேர’ முயற்சித்தால் மோசமான விளைவுகளை சந்திக்க நேரிடும் என ரஷ்யா எச்சரிக்கை விடுத்துள்ளது.