காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் குமரி ஆனந்தன் காலமானார்.

அரசியல் இந்தியா சிறப்பு செய்திகள் தமிழ்நாடு

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் ஆளுநருமான தமிழிசை சவுந்தரராஜனின் தந்தை குமரி ஆனந்தன் காலமானார். அவருக்கு வயது 93 . பிஜேபியின் முன்னாள் தலைவர் தமிழிசை சௌந்திரராஜன், தனது தந்தையின் மறைவை தன் உணர்வுகளை வெளிப்படுத்தும் வகையில், எக்ஸ் பக்கத்தில் ஒரு உருக்கமான பதிவாக பகிர்ந்துள்ளார். கடந்த சில நாட்களாக, வயது மூப்பின் காரணமாக அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.நேற்று, அவருக்கு சுவாசிக்க சிரமம் ஏற்பட்டதால், வேலூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை வழங்கப்பட்டது. ஆனால், சிகிச்சை பலனளிக்காத நிலையில், குமரி அனந்தன் இன்று காலமானார். அவரது மறைவுக்கு பல அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இன்று மாலை அவரது உடல் முழு அரசு மரியாதையுடன் இறுதி மரியாதை செய்யப்பட்டு வடமனியில் உள்ள மின் மயானத்தில் உடல் தகனம் செய்யப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *