பன்னாட்டு நிறுவனமான ஆம்வே நிறுவனத்திற்கு சொந்தமான ரூ.411.83 கோடி மதிப்பிலான அசையா சொத்துகளையும் 36 வங்கிக்கணக்குகளில் உள்ள மொத்தம் ரூ.345.94 கோடி பணத்தையும் அமலாக்கத்துறை முடக்கம் செய்துள்ளது.
இதில், தமிழ்நாட்டின் திண்டுக்கல் மாவட்டத்தில் அமைந்துள்ள அந்நிறுவனத்தின் தொழிற்சாலை நிலங்கள், கட்டிடங்கள் மற்றும் உபகரணங்கள் என அனைத்தும் அடங்கும் என அமலாக்கத்துறை தெரிவித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
ஆம்வே நிறுவனம் மல்டி லெவல் மார்க்கெட்டிங் மூலம் மோசடியில் ஈடுபட்டதற்காக, இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுளளது. இதுதொடர்பாக அந்த நிறுவனம் இதுவரையில் எந்த வகையான அறிக்கையையும் அளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.