பிரிட்டனில் உள்ள சுற்றுச்சூழல் அமைப்பு எம்பர், சுற்றுச்சூழலுக்கு பாதிப்பில்லாத எரிசக்தி உற்பத்தி தொடர்பான ஆண்டுதோறும் ஆய்வுகளை மேற்கொண்டு, விரிவான அறிக்கைகளை வெளியிடுகிறது. சமீபத்தில், எம்பர் அமைப்பின் ஆய்வறிக்கை வெளியிடப்பட்டது.இந்த அறிக்கையில், உலகளாவிய மின் உற்பத்தி தொடர்பான 215 நாடுகளின் விவரங்களை அடிப்படையாகக் கொண்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. கடந்த ஆண்டில், சர்வதேச அளவில் மின் உற்பத்தியில் 41 சதவீதம் மின்சாரம் அணு சக்தி மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி முறைகளில் உருவாக்கப்பட்டுள்ளது. சர்வதேச அளவில் மின்சார உற்பத்தி முறைகள் பின்வருமாறு உள்ளன: நீர் மின் மூலம் 14%, அணு சக்தி மூலம் 9%, காற்கற்கள் மூலம் 8%, சூரிய மின் கட்டமைப்புகள் மூலம் 7%, மற்றும் பிற புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மூலம் 3% மின் உற்பத்தி செய்யப்படுகிறது. மின்சாரத்தை அதிகமாக பயன்படுத்தும் நாடுகளின் பட்டியலில் சீனா முதன்மை இடத்தில் உள்ளது, அதனை தொடர்ந்து அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம், இந்தியா, ரஷ்யா, ஜப்பான் மற்றும் பிரேசில் ஆகிய நாடுகள் வருகிறன. காற்று மற்றும் சூரிய மின் உற்பத்தியில் சீனா முதல் இடத்தில் உள்ளது.இந்தியாவில் சூரிய மற்றும் காற்றாலை மின் உற்பத்தி கடந்த 5 ஆண்டுகளில் இருமடங்கு அதிகரித்துள்ளது. சர்வதேச அளவில் காற்று மற்றும் சூரிய சக்தி மின் உற்பத்தியில், ஜெர்மனியை முந்தி, இந்தியா 3வது இடத்திற்கு முன்னேறியுள்ளது. இந்தியாவின் மொத்த மின் உற்பத்தியில் 78% நிலக்கரி மற்றும் பிற புதைபடிமங்களிலிருந்து பெறப்படுகிறது, மேலும் மீதமுள்ள 22% காற்றாலை, சூரிய மின் அமைப்புகள் மற்றும் அணு மின் நிலையங்கள் போன்ற புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மூலம் உற்பத்தி செய்யப்படுகிறது.

