நியூயோர்க்கில் நடந்த துப்பாக்கி சூட்டில், காவல் அதிகாரி உட்பட பலர் உயிரிழந்தனர்.

அமெரிக்கா அரசியல் உலகம் செய்திகள் போராட்டம்/ கலவரம்

நியூயோர்க்கின் மத்திய மன்ஹாட்டனில் நேற்று இரவு நடைபெற்ற துப்பாக்கிச்சூட்டில், காவல் அதிகாரி உட்பட l நான்கு பேர் உயிரிழந்தனர். லாஸ் வேகாஸைச் சேர்ந்த 27 வயதான சேன் தமுரா என தற்காலிகமாக அடையாளம் காணப்பட்ட ஒருவரே இந்த துப்பாக்கிச்சூட்டை நடத்தியுள்ளார். பின்னர், அவர் தன்னை தானே துப்பாக்கியால் சுட்டு உயிரை மாய்த்துக் கொண்டுள்ளார் என்று காவல்துறை விசாரணையில் தெரிவித்துள்ளனர். மன்ஹாட்டனின் நெரிசலான பகுதியில் உள்ள ஒரு வானளாவிய கட்டிடத்தில் துப்பாக்கிச்சூடு நடந்ததால், அந்தப் பகுதியில் உடனடியாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இந்நிலையில் நியூயோர்க் காவல் துறையை சேர்ந்த ஒரு அதிகாரி உட்பட குறைந்தது ஆறு பேர் சுட்டுக் கொல்லப்பட்டதாகவும், அதிகாரி ஒருவர் மருத்துவமனையில் ஆபத்தான நிலையில் இருப்பதாகவும் கூறப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *