நாட்டின் எல்லைப் பகுதிகளில் பாதுகாப்புப் பணியில் ஈடுபடும் ராணுவ வீரர்கள், ஆண்டுக்கு 100 நாட்கள் விடுப்புடன் தங்கள் குடும்பத்துடன் இருக்க அல்லது தலைமை அலுவலகத்தில் பணியமர்த்தப்படுவார்கள் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா அறிவித்துள்ளார்.
பெங்களூருவில் நடைபெற்ற இந்தோ – திபெத் காவல்துறைக்கு நிறைவேற்றப்பட்ட பல்வேறு திட்டப் பணிகளை தொடங்கி வைத்தி அமித்ஷா இத்தகவலை தெரிவித்தார்.
எல்லைப் பாதுகாப்புப் பணியில் ஈடுபடும் ராணுவ வீரர்களுக்கு ஆண்டுதோறும் 100 நாள்கள் விடுப்புடன் அவர்களது குடும்பத்துடன் தங்கியிருக்க அல்லது தலைமை அலுவலகத்தில் பணியாற்ற வாய்ப்பு வழங்கப்படும். இந்த பரிந்துரையை நிறைவேற்றுவது குறித்த பணிகள் தொடங்கப்படும் என்றும் குறிப்பிட்டார். இதன் மூலம் ராணுவ வீரர்களுக்கு ஏற்படும் மன அழுத்தம் குறையும். எல்லைப் பாதுகாப்புப் பணி என்பது மிகவும் சவாலானது என்றும் அமித்ஷா கூறினார்.