தாய் கெழவி திரைப்படத்தின் வெற்றியை கேக் வெட்டி கொண்டாடிய படக்குழு; தயாரிப்பாளர் சிவகார்த்திகேயன் பகிர்ந்த தகவல்

இசை இந்தியா கடந்த நிகழ்ச்சிகள் சினிமா செய்திகள் தமிழ்நாடு நிகழ்வுகள் பெண்கள் பொழுதுபோக்கு மண்மணம் மற்றவை முதன்மை செய்தி

சிவகார்த்திகேயன் தயாரிப்பில் ராதிகா நடித்து அண்மையில் திரையரங்குகளில் வெளியாகியுள்ள படம் ’தாய் கிழவி’ . அறிமுக இயக்குநர் சிவகுமார் முருகேசன் இயக்கியுள்ள இந்தப் படத்தில் சிங்கம் புலி, அருள்தாஸ், பாலசரவணன், முனிஷ்காந்த், இளவரசு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். மேலும் இப்படத்திற்கு நிவாஸ் கே. பிரசன்னா இசையமைத்துள்ளார்.
கடந்த வாரம் வெளியான தாய் கிழவி படம் வசூல் ரீதியிலும் இந்தப் படம் வெற்றி பெற்றுள்ளது. இந்தப் படம் வெளியான சில நாட்களில் ரூ. 22 கோடிக்கும் அதிக வசூல் செய்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.
இந்த நிலையில் தாய் கிழவி படக்குழு இந்த வெற்றியை கேக் வெட்டி கொண்டாடியுள்ளது. இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *