கரப்பான்பூச்சி ஜனதா கட்சிக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு.

அரசியல் இந்தியா செய்திகள் முதன்மை செய்தி

இந்தியாவில் சமூக வலைத்தளங்களில் நகைச்சுவை மற்றும் நையாண்டி வடிவில் உருவாக்கப்பட்ட “கரப்பான்பூச்சி ஜனதா கட்சி” தற்போது உலக அளவில் பேசப்படும் ஒன்றாக மாறியுள்ளது. பலரும் இந்த பெயரை பயன்படுத்தி இணையத்தில் கருத்துகள் மற்றும் பதிவுகளை பகிர்ந்து வருகின்றனர்.இந்த சூழலில், அந்த கட்சியுடன் தொடர்புடைய சிலர் மீது கடுமையான குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. குறிப்பாக போலி வக்கீல்கள் மற்றும் சிலரின் சந்தேகமான செயல்பாடுகள் குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்று கோரி சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.அந்த மனுவில், நீதிமன்ற விசாரணைகளின் போது வெளியான வாய்மொழி கருத்துகளை அடிப்படையாக கொண்டு, வணிக ரீதியான சுரண்டலில் ஈடுபட்டதாக கூறப்படும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரப்பட்டுள்ளது.இந்த வழக்கு தற்போது சமூக வலைத்தளங்களிலும் அரசியல் வட்டாரங்களிலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *