அரசுக்கு எதிரான வழக்கை என் அமர்வு விசாரிக்க ஒன்றிய அரசு விரும்பவில்லை” – தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் குற்றச்சாட்டு

அரசியல் இந்தியா சிறப்பு செய்திகள் நீதி மன்றம்

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய், “அரசுக்கு எதிரான வழக்குகளை என் தலைமையிலான அமர்வு விசாரிப்பதை ஒன்றிய அரசு விரும்பவில்லை” என்று குற்றம் சாட்டியுள்ளார்.அவர் கூறியதாவது:நள்ளிரவில் மனு தாக்கல் செய்து, வழக்கை ஒத்திவைக்க முயற்சி நடந்துள்ளது. நாடு முழுவதும் தீர்ப்பாயங்களுக்கு ஒரே மாதிரியான நியமனம் செய்ய உத்தரவிடக் கோரிய வழக்கு மீண்டும் என் அமர்வில் வந்தது. அப்போது அட்டார்னி ஜெனரல் வெங்கட்ரமணி, “இந்த வழக்கை 5 நீதிபதிகள் கொண்ட பெரிய அமர்வுக்கு மாற்ற வேண்டும்” என்று கோரினார்.இதனை தலைமை நீதிபதி ஏற்க மறுத்து,“மனுதாரர்கள் வாதம் முடிந்த பிறகு இப்படி கோருவது சரியல்ல. இதுவரை என்ன செய்து கொண்டிருந்தீர்கள்? ஒன்றிய அரசு என் அமர்வு வழக்கை விசாரிக்க வேண்டாம் என்று நினைக்கிறது. அதனால்தான் நள்ளிரவில் மனு தாக்கல் செய்து வழக்கை மாற்ற முயன்றுள்ளனர்,” என்று கடுமையாக விமர்சித்தார்.இறுதியில், ஒன்றிய அரசின் கோரிக்கையை நிராகரித்து, வழக்கை நவம்பர் 7ஆம் தேதி விசாரணைக்கு ஒத்திவைத்தார்.குறிப்பாக, தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் இந்த மாதம் 23ஆம் தேதி ஓய்வு பெறவுள்ளார். வழக்கு தாமதமானால், அவர் தீர்ப்பு வழங்க முடியாது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *