ஆவினில் ஆரஞ்சு நிற பால் பாக்கெட்டுகள் நிறுத்தப்பட்டுள்ளது; ஆவின் டிலைட் என்ற பெயரில் வைலட் நிறத்தில் விற்பனை செய்யப்படும் என அறிவிப்பு, 50 பைசா விலையேற்றம்

அரசியல் ஆரோக்கியம் இந்தியா கடந்த நிகழ்ச்சிகள் சமையல் செய்திகள் தமிழ்நாடு நிகழ்வுகள் பொருளாதாரம் மற்றவை முதன்மை செய்தி

ஆவினில் ஆரஞ்சு நிற பால் பாக்கெட்டுகள் நிறுத்தப்பட்டு ஆவின் டிலைட் என்ற பெயரில் வைலட் நிரத்தில் பால் விற்பனை செய்யப்பட்ட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் விலை ஆரஞ்சு நிற பால் பாக்கெட்டை விட 50 காசுகள் அதிகரித்துள்ளது.
தமிழ்நாடு முழுவதும் ஏராளமான பொதுமக்கள் ஆவின் பாலை பயன்படுத்து வருகின்றனர். ஆரஞ்சு, பச்சை உள்ளிட்ட நிறங்களில் பால் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் ஆவினின் ஆரஞ்சு நிற பால் பாக்கெட்டுகள் முழுவதுமாக நிறுத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளாது.
இது குறித்து திருநெல்வேலி ஆவின் சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதில், திருநெல்வேலி ஒன்றியம் மூலம் விற்பனை செய்யப்படும் ஆரஞ்சு நிற பால் பாக்கெட்டுகள் நவம்பர் 15 ஆம் தேதியுடன் முற்றிலும் நிறுத்தப்பட்டு, 16 (இன்று) ஆம் தேதி முதல் ஆவின் டிலைட் என்ற பெயரில் விற்பனை செய்யப்பட உள்ளது. மேலும் ஆவின் டிலைட் 200 மில்லி பாலின் விலை மாற்றம் செய்யப்பட்டுள்ளதகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதன்படி ஆவின் டிலைட் 200 மில்லி பால், இன்று முதல் ரூ.10க்கு விற்பனை செய்யப்படுகிறது. இந்நிலையில் ஆரஞ்சு பாக்கெட் பாலை விட ஆவின் டிலைட் பால் பாக்கெட்டிற்கு 50 காசுகள் அதிகரிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published.