பொதுத் தேர்வு அட்டவணை தீபாவளிக்கு பிறகு வெளியிடப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் ஏற்கெனவே அறிவித்திருந்தார். அதன் படி, தீபாவளி பண்டிகை முடிந்த நிலையில், இன்று 10,11,12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு தேதிகள் மற்றும் ரிசல்ட் தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலக கட்டட வளாகத்தில் 2023-24ம் கல்வியாண்டிற்கான பத்தாம் வகுப்பு, 11 மற்றும் 12-ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு அட்டவணையை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வெளியிட்டார்.
10ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் மார்ச் 26ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 8ஆம் தேதி வரை நடைபெறுகிறது. 11ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் மார்ச் 04ஆம் தேதி தொடங்கி மார்ச் 25ஆம் தேதி வரை நடைபெறுகிறது. 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் மார்ச் 1ஆம் தேதி தொடங்கி மார்ச் 22ஆம் வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதே போன்று 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவு மே 10ல் வெளியிடப்படும்.மே 14ஆம் தேதி 11ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியிடப்படும். மே 6ஆம் தேதி 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவு வெளியிடப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.