தமிழ்நாட்டில் விலைவாசி உயர்வு: இந்திய அளவில் 2வது இடம்

ஆரோக்கியம் இந்திய வணிகம் இந்தியா சிறப்பு செய்திகள் தமிழ்நாடு பொருளாதாரம்

இந்தியாவில் பொருட்களின் விலைவாசி உயர்வில் தமிழ்நாடு 2வது இடத்தில் உள்ளதாக ஒன்றிய அரசின் புள்ளிவிவரங்களில் தகவல் வெளியாகியுள்ளது. தெலுங்கானாவுக்கு அடுத்தபடியாக தமிழ்நாட்டில் பொருட்களின் விலை அதிகமாக உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.குறிப்பாக, அன்றாட பயன்பாட்டில் உள்ள பொருட்களின் விலை உயர்வு பொதுமக்களின் குடும்பச் செலவுகளில் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. உணவுப் பொருட்களின் விலை உயர்விலும் தமிழ்நாடு இந்திய அளவில் 3வது இடத்தில் இருப்பதாக ஒன்றிய அரசு வெளியிட்டுள்ள புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.மேலும், தமிழ்நாட்டில் ஆகஸ்ட் மாத பணவீக்க விகிதம் 5.92 சதவீதமாக அதிகரித்துள்ளதாக ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது. பணவீக்கம் அதிகரிப்பதால் உணவு, அத்தியாவசியப் பொருட்கள் உள்ளிட்டவற்றின் விலை உயர்ந்து, மக்களின் மாதாந்திர செலவுகள் அதிகரிக்க வாய்ப்புள்ளது.விலைவாசி உயர்வு குறிப்பாக நடுத்தர மற்றும் குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களின் பொருளாதார நிலையை பாதிக்கக்கூடிய முக்கிய காரணியாக பார்க்கப்படுகிறது. உணவு மற்றும் அத்தியாவசியப் பொருட்களின் விலை தொடர்ந்து அதிகரித்தால், குடும்பங்களின் சேமிப்பு மற்றும் பிற செலவுகளிலும் தாக்கம் ஏற்படலாம் எனக் கூறப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *