8வது முறையாக டி20 ஆசிய கோப்பையை வென்ற இந்திய மகளிர் கிரிக்கெட் அணி

அரபு நாடுகள் இந்தியா இலங்கை உலகம் கடந்த நிகழ்ச்சிகள் செய்திகள் நிகழ்வுகள் பெண்கள் மற்றவை முதன்மை செய்தி விளையாட்டு

10-ஆவது மகளிர் ஆசிய கோப்பை டி20 கிரிக்கெட் தொடர் துபாயில் நடந்து வந்தது. 8 அணிகள் பங்கேற்ற இந்த தொடரில் இரு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு லீக் சுற்றுகள் நடைபெற்றன. இதில் நான்கு அணிகள் அரையிறுதி சுற்றுக்கு முன்னேறின. அரையிறுதி போட்டிகளில் இந்தியா மற்றும் இலங்கை அணிகள் வெற்றிபெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறின.
இந்த நிலையில், இவ்விறு அணிகள் இடையிலான இறுதிப் போட்டி நேற்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டின் ஆடியது. 20 ஓவர் முடிவில் இந்திய அணி 5 விக்கஎட் இழப்புக்கு 183 ரன்கள் எடுத்தது. இந்திய அணி சார்பில் அதிகபட்சமாக ஷெஃபாளி வெர்மா 68 ரன்களும் ஸ்மிரிதி மந்தனா 59 ரன்களும் எடித்தனர். இதனைத்தொடர்ந்து ஆடிய இலங்கை அணி 20 ஓவர் முடிவில் அனைத்து விக்கெடுகளையும் இழந்து 111 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் இந்திய மகளிர் அணி 8-வது முறையாக மகளிர் ஆசிய கோப்பையை கைப்பற்றி அசத்தியது.
இந்த நிலையில் 8-வது முறையாக ஆசிய கோப்பையை வென்ற இந்திய மகளிர் கிரிக்கெட் அணிக்கு பிரதமர் மோடி உட்படெ பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *