பாரதரத்னா எம்.எஸ். சுப்புலட்சுமி வாழ்க்கை வரலாறு திரைப்படம் ஆகிறது; படப்பிடிப்பை கமல்ஹாசன் தொடங்கி வைக்கிறார்

இசை இந்தியா சினிமா செய்திகள் தமிழ்நாடு தமிழ்நாடு நிகழ்வுகள் பெண்கள் மற்றவை முதன்மை செய்தி வரும் நிகழ்ச்சிகள்

பாடகி எம்.எஸ். சுப்புலட்சுமியின் வாழ்க்கை வரலாற்றுத் திரைப்படத்தில் ராஷ்மிகா மந்தனா நாயகியாக நடிப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய இசை உலகில் மிகப்பெரிய ஆளுமைகளில் ஒருவர் எம்.எஸ். சுப்புலட்சுமி. இவரது வாழ்க்கை வரலாற்றைத் திரைப்படமாக எடுக்க தொடர்ந்து முயற்சிகள் நடைபெற்று வந்த நிலையில், தற்போது இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.
‘ஜெர்சி’, ‘கிங்டம்’ திரைப்படங்களை இயக்கிய கவுதம் தின்னூரி இயக்குகிறார். எம்.எஸ். சுப்புலட்சுமி கதாபாத்திரத்தில் நடிகை ராஷ்மிகா மந்தனா நடிக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தப் படத்திற்கு அனிருத் இசையமைப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. எம்.எஸ். சுப்புலட்சுமியின் 110-ஆவது பிறந்தநாளையொட்டி இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. படத்தின் தொடக்க நிகழ்ச்சி புதன்கிழமையன்று சென்னை தி மியூசிக் அகாடமியில் நடைபெற உள்ளது. படப்பிடிப்பை நடிகர் கமல்ஹாசன் தொடங்கி வைக்கிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *