தமிழகத்தில் பனிரெண்டாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியீடு; 600க்கு 600 எடுத்து திண்டுக்கல் மாணவி நந்தினி புதிய சாதனை

இந்தியா உயர்கல்வி கடந்த நிகழ்ச்சிகள் செய்திகள் தமிழ் பள்ளி நிகழ்வுகள் தமிழ்க்கல்வி தமிழ்நாடு நிகழ்வுகள் மற்றவை முதன்மை செய்தி

தமிழ், ஆங்கிலம், எக்னாமிக்ஸ், காமர்ஸ், அக்கவுண்டன்சி, கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் உள்ளிட்ட பாடங்களில் நூற்றுக்கு நூறு மார்க் எடுத்து மாநில அளவில் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளார் திண்டுக்கல்லைச் சேர்ந்த மாணவி.
தமிழகம் முழுவதும் கடந்த மார்ச் மாதம் 13ம் தேதி 12ஆம் வகுப்புக்கான பொது தேர்வு நடைபெற்றது. இத்தேர்வில் தமிழகம் முழுவதும் உள்ள மாணவ,மாணவிகள் தேர்வு எழுதினார். இந்நிலையில் தேர்வு முடிவுகள் இன்று தமிழக கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வெளியிட்டார்.
இந்நிலையில் திண்டுக்கல் பாரதி புரத்தை சேர்ந்த கூலி தொழிலாளி சரவணகுமார், பாலப்பிரியா தம்பதியின் மகள் நந்தினி. திண்டுக்கல் அண்ணாமலையார் மில்ஸ் பெண்கள் மேல்நிலை பள்ளியில் 12ம் வகுப்பு படித்தார். இன்று தேர்வு முடிவுகள் வெளியான நிலையில் நந்தினி தமிழ், ஆங்கிலம், பொருளியல், வணிகவியல், கணக்குப்பதிவியல், கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் உள்ளிட்ட . பாடங்களிலும் 100 மதிப்பெண்கள் எடுத்து மொத்தமாக 600 மதிப்பெண்கள் எடுத்து சாதனை படைத்துள்ளார்.
மேலும் இப்பள்ளி மாணவி நந்தினி இப்பள்ளியில் எல்கேஜி முதல் 12 ஆம் வகுப்பு வரை இதே பள்ளியில் படித்து வருகிறார்.மேலும் இப்பள்ளியின் பள்ளி தாளாளர் ஜெயபால். தலைமை ஆசிரியர் அகிலா,தமிழ் ஆசிரியர் அனுராதா,ஆங்கில ஆசிரியர் தீபா,மரிய சாந்திராஜலட்சுமி,அஷ்டலட்சுமி ஆகியோர் தனக்கு ஊக்கமளித்து தற்போது அதிக மதிப்பெண் பெறுவதற்கு அனைவரும் ஊக்கமளித்ததாகவும் தனது வெற்றிக்குத் தனது பெற்றோரும் உறுதுணையாக இருந்ததாகவும் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *