ரஷ்யா அதிபர் இந்தியா வருகிறார்; பிரிக்ஸ் மாநாட்டில் கலந்து கொள்ள செப்டம்பர் மாதத்தில் பயணம் மேற்கொள்கிறார்

அரசியல் இந்தியா உலகம் செய்திகள் நிகழ்வுகள் மற்றவை மாநாடு முதன்மை செய்தி ரஷ்யா வரும் நிகழ்ச்சிகள்

பிரிக்ஸ் அமைப்பின் தற்போதைய தலைவராக இந்தியா உள்ளது. மேலும் புதுடெல்லில் இந்த ஆண்டு செப்டம்பர் 12 மற்றும் 13 ஆகிய தேதிகளில் பிரிக்ஸ் அமைப்பின் உச்சி மாநாடு நடைபெற உள்ளது.
இந்த நிலையில் இந்தியாவில் செப்டம்பர் மாதம் நடைபெற உள்ள பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் ரஷ்ய அதிபர் விளாடிமர் புதின் கலந்து கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இது தொடர்பாக தென் ஆப்பிரிக்காவில் உள்ள ரஷ்ய தூதரகம் வெளியிட்டுள்ள் எக்ஸ் பதிவில் “ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின், செப்டம்பர் 12-13 தேதிகளில் புது தில்லியில் நடைபெறும் பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் கலந்துகொள்வார் – கிரெம்ளின் உதவியாளர் யூரி உஷாகோவ்,” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக கடந்த டிசம்பர் 2025-ல் நடைபெற்ற 23-வது இந்தியா-ரஷ்யா வருடாந்திர உச்சி மாநாட்டிற்காக ரஷ்ய அதிபர் புதின் இந்தியாவுக்கு வருகை தந்திருந்தார் என்பது குறிப்படத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *