தமிழ்நாட்டின் ஒருங்கிணைந்த இறுதி வாக்காளர் பட்டியலை தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் வெளியிட்டார்

அரசியல் இந்தியா கடந்த நிகழ்ச்சிகள் செய்திகள் தமிழ்நாடு தேர்தல் செய்திகள் 2024 நிகழ்வுகள் மற்றவை முதன்மை செய்தி

தமிழ்நாட்டில் 6.36 கோடி வாக்காளர்கள் இருப்பதாகவும், அதில் 3.11 கோடி ஆண்களும், 3.24 கோடி பெண்களும், 9,120 மூன்றாம் பாலினத்தவர்களும் இருப்பதாக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் தெரிவித்தார்.
தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் சென்னை தலைமை செயலகத்தில் 2025 ஆம் ஆண்டின் ஒருங்கிணைந்த இறுதி வாக்காளர் பட்டியலை வெளியிட்டு செய்தியாளர்களை சந்தித்தார்.
2025 ஆம் ஆண்டு சுருக்கமுறை திருத்தத்தின் அடிப்படையில் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீட்டின் படி தமிழகத்தில் மொத்தம் 6 கோடியே 36 லட்சத்து 12 ஆயிரத்து 950 வாக்காளர் உள்ளனர். அதில் 3 கோடியே 11 லட்சத்து 74,027 ஆண் வாக்காளர்கள், 3 கோடியே 24 லட்சத்து 29 ஆயிரத்து 803 பெண் வாக்காளர்கள் மற்றும் 9120 மூன்றாம் பாலின வாக்காளர்கள் உள்ளனர்.
மேலும் 6 லட்சத்து 90 ஆயிரத்து 958 வாக்காளர்களுடன் சோழிங்கநல்லூர் தொகுதி தமிழ்நாட்டில் அதிக வாக்காளர்கள் கொண்ட தொகுதியாகவும், 1 லட்சத்து 76 ஆயிரத்து 505 வாக்காளர்களுடன் கீழ்வேளூர் தொகுதி குறைந்த எண்ணிக்கையிலான வாக்காளர்களை கொண்ட தொகுதியாகவும் உள்ளதாக தெரிவித்தார். இறுதி வாக்காளர் பட்டியலில் 3740 வெளிநாடு வாழ் வாக்காளர்கள் இடம்பெற்றுள்ளனர் என அவர் தெரிவித்தார்.
மேலும் வாக்காளர் பட்டியலினை தலைமை தேர்தல் அதிகாரியின் வலைதளமான https://elections.tn.gov.in என்ற வலைதளத்தில் தெரிந்து கொள்ளலாம் என தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *