கடந்த பத்து ஆண்டுகளாக திரைப்படங்களில் அதிகளவு நடிக்காமல் ஒதுங்கியிருந்த வைகைப் புயல் வடிவேலு மீண்டும் நடிப்பில் களமிறங்குகிறார். தயாரிப்பாளர்கள் சங்கம் இவருக்கு ரெட் கார்டு வழங்கியதன் காரணமாகவும், இவருக்கு திரைப்படங்களில் நடிக்க தடை இருந்த நிலையில், அத்தடை இப்பொழுது விலக்கிக் கொள்ளப்பட்டுள்ளது. மீம்ஸ்களில் மட்டுமே கடந்து பத்து ஆண்டுகளாக ரசிகர்கள் கொண்டாடி வந்த நிலையில் மீண்டும் வடிவேலு நடிக்கப்போகிறார் என்ற செய்தி அனைவரையும் உற்சாகப்படுத்தியிருக்கிறது.