70வது தேசிய திரைப்பட விருதுகள் வழங்கும் விழா டில்லியில் இன்று (அக்., 8) நடைபெற்றது. ஜனாதிபதி திரவுபதி முர்மு வெற்றி பெற்ற திரைக்கலைஞர்களுக்கு விருதுகளை வழங்கி அவர்களை கவுரவித்தார். மத்திய அரசு ஒவ்வொரு ஆண்டும் தேசிய திரைப்பட விருதுகளை வழங்குகிறது. 2022ம் ஆண்டுக்கான 70வது தேசிய திரைப்பட விருதுகளின் பட்டியல் கடந்த ஆகஸ்ட் 16ல் அறிவிக்கப்பட்டன ,தமிழ் சினிமாவில் இருந்து சிறந்த தமிழ் படமாக மணிரத்னம் இயக்கிய பொன்னியின் செல்வன்-1 படம் தேர்வானது. இந்த படத்திற்கு சிறந்த பின்னணி இசை, ஒலி வடிவமைப்பு, ஒளிப்பதிவு என 4 விருதுகள் கிடைத்தன. மேலும் தனுஷ் நடித்த திருச்சிற்றம்பலம் படத்திற்கு சிறந்த நடிகை மற்றும் நடனம் ஆகிய பிரிவுகளில் 2 விருதுகளும் அறிவிக்கப்பட்டன, தயாரிப்பாளர் லைகா சுபாஸ்கரன் (பொன்னியின் செல்வன் 1), இயக்குனர் மணிரத்னம் (பொன்னியின் செல்வன் 1), ஏ.ஆர். ரஹ்மான் (பொன்னியின் செல்வன் 1) இந்நிலையில், பொன்னியின் செல்வன்-1 படத்திற்காக சிறந்த பின்னணி இசைக்கான தேசிய விருது ஏ.ஆர். ரஹ்மானுக்கு வழங்கப்பட்டது, இது அவரது 7வது தேசிய விருது ஆகும். நித்யா மேனன் (திருச்சிற்றம்பலம்), சதீஷ் கிருஷ்ணன் (திருச்சிற்றம்பலம்), ரவி வர்மா (பொன்னியின் செல்வன்-1), ஆனந்த் கிருஷ்ணமூர்த்தி (பொன்னியின் செல்வன்-1) . மேலும் சிறந்த நடிகராக காந்தாரா ரிஷப் ஷெட்டி, சிறந்த படமாக ஆட்டம் (மலையாளம்), சிறந்த சண்டை இயக்குனராக அன்பறிவ் (கேஜிஎப்-2), சிறந்த இசையமைப்பாளராக பிரிதம் (பிரம்மாஸ்திரா-1) என பல்வேறு பிரிவுகளின் விருதுகள் வழங்கப்பட்டன.

