தளபதி விஜய் நடித்து எச்.வினோத் இயக்கியுள்ள திரைப்படம் ‘ஜனநாயகன்’. இப்படம் பொங்கல் வெளியீடாக அடுத்தாண்டு ஜனவரி 9 ம் தேதி வெளியாகவுள்ளது.. இப்படத்தின் கதாநாயகியாக பூஜா ஹெக்டேவும் முக்கிய கதாபாத்திரத்தில் மமிதா பைஜூ மற்றும் பல முன்னணி நடிகர்கள் நடித்துள்ளனர். இசையமைப்பாளர் அனிருத் இசையில் இன்று படத்தின் முதல் சிங்கிளாக `தளபதி கச்சேரி’ என்ற பாடல் வெளியாகி உள்ளது. இப்பாடல் அறிவு வரிகளில் அனிருத், விஜய், அறிவு ஆகியோர் பாடியுள்ளனர். பாடல் வெளியான அரை மணி நேரத்துக்குள்ளாக 10 லட்சத்திற்கும் அதிமானோர் இப்பாடலை பார்த்துள்ளனர் . கடந்த சில விஜய் படங்களில் முதல் சிங்கிளாக விஜய் பாடிய பாடலே வெளியானது. அதே போல ஜன நாயகனிலும் விஜய் பாடியுள்ளதால் தளபதி கச்சேரி என்ற பாடலை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

