டெல்லியில் செயற்கை மழை – ஐஐடி கான்பூருடன் ஒப்பந்தம்

இந்தியா சிறப்பு சுற்றுச் சூழல் செய்திகள் வானிலை

டெல்லி நகரில் அதிகரித்து வரும் காற்று மாசுபாட்டை குறைக்கும் நோக்கில், டெல்லி அரசு செயற்கை மழையை உருவாக்கும் திட்டத்தை தொடங்கியுள்ளது. இதற்காக ஐஐடி கான்பூருடன் (IIT Kanpur) அரசு ஒப்பந்தம் செய்துள்ளது.இந்த திட்டத்தின் கீழ், ஐஐடி கான்பூர் விஞ்ஞானிகள் குழு செயற்கை மழையை உருவாக்கும் பணிகளை மேற்கொள்ள உள்ளனர். அனைத்து அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நடவடிக்கைகளையும் ஐஐடி குழு கையாளும் என டெல்லி அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.செயற்கை மழைக்காக, “செஸ்னா 206H” என்ற சிறப்பு விமானம் தயாராக வைக்கப்பட்டுள்ளது. இதில் சில்வர் அயோடைட் (Silver Iodide) என்ற ரசாயனத்தை மேகங்களில் தெளிக்கும் சிறப்பு கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன. இந்த விமானம் மற்றும் கருவிகள் ஏற்கனவே சோதனை செய்யப்பட்டு, ஐந்து முறை வெற்றிகரமாக சோதனை ஓட்டம் நடத்தப்பட்டு உள்ளது என கூறப்படுகிறது.மேலும், மழை மேகங்கள் உருவாகும் சூழ்நிலையை கணிக்க, டெல்லி அரசு இரண்டு மாதங்களுக்கு முன்பு வானிலை ஆய்வு மையத்தை தொடர்பு கொண்டு மழைக்கான சூழலை தொடர்ந்து கண்காணித்து வருகிறது. மழை மேகங்கள் டெல்லி அருகே தோன்றும் போது, வானிலை மையம் அரசுக்கு உடனடியாக தகவல் வழங்கும். அதன் பிறகு, ஐஐடி கான்பூர் குழுவினர் ரசாயனத்தை மேகங்களில் தெளித்து செயற்கை மழையை உண்டாக்க நடவடிக்கை எடுப்பார்கள் என கூறப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *