72 நாடுகளைச் சேர்ந்த விளையாட்டு வீரரும் வீராங்கனைகளும் பங்கேற்கும் காமன்வெல்த் விளையாட்டு போட்டிகளை நடத்த பல நாடுகள் போட்டியிட்டன, அதில் இந்தியாவும் ஒன்று. சில மாதங்களுக்கு முன்பு, காமன்வெல்த் விளையாட்டு குழுவினர் அகமதாபாத்தில் நேரடி ஆய்வு மேற்கொண்டனர்.அந்த ஆய்வின் அடிப்படையில், 2030 காமன்வெல்த் விளையாட்டுகள் இந்தியாவின் குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் நடத்தப்படும் என்று காமன்வெல்த் கூட்டமைப்பு அதிகாரப்பூர்வமாக ஒப்புதல் அளித்துள்ளது.அகமதாபாத்தில் உலகத் தரத்திலான விளையாட்டு மைதானங்கள், அதிநவீன வசதிகளுடன் கூடிய பயிற்சி மையங்கள் மற்றும் சிறந்த அடிப்படை அமைப்புகள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

