நடிகர் விஜய்யின் ‘தளபதி 68’ படத்தை வெங்கட் பிரபு இயக்கி வருகிறார். இந்த திரைப்படம், அடுத்தாண்டு ஜூன் மாதம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்படத்தினை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இந்த திரைப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.
லைலா, மீனாட்சி சவுத்ரி, பிரசாந்த், பிரபுதேவா உள்ளிட்டோர் இதில் நடித்து வருகின்றனர். இவர்களுடன் ஸ்னேகா, மோகன், ஜெயராம், அஜ்மல், யோகிபாபு, VTV கணேஷ்,வைபவ், பிரேம்ஜி, அர்விந்த் ஆகாஷ், அஜய்ராஜ் உள்ளிட்ட நடிகர்களும் நடிக்கின்றனர்.
படத்தின் பூஜை கடந்த அக்டோபர் 24 ஆம் தேதி நடைபெற்றது. இப்படத்திற்கான ஷூட்டிங் பேங்காக்கில் நடைபெற்று வந்தது. இந்நிலையில் படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு இலங்கையில் தொடங்குவதாக கூறப்பட்டு வந்தது. ஜனவரி முதல் வாரம் தொடங்கும் இந்தப் படப்பிடிப்பில் விஜய்யுடன் மற்ற நடிகர்களும் கலந்துகொள்ள உள்ளனர்.
‘தளபதி 68’ திரைப்படம் சயின்ஸ் ஃபிக்ஷன் ஜானரில் தொடங்குவதாகவும் அதில்
விஜய் அப்பா, மகன் என இரண்டு அல்லது மூன்று கேரக்டர்களில் நடித்து வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஹாலிவுட் ஹீரோவான ஸ்மித் நடித்த ‘ஜெமினி மேன்’ படத்தின் ரீமேக்காக இருக்கலாம் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
‘தளபதி 68’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி இன்று மாலை 6 மணிக்கு ‘தளபதி 68’ படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது. ‘The Greatest of All Time’ என்று இப்படத்திற்கு தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இரண்டு வேடங்களில் விஜய் இடம்பெற்றிருக்கும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது இணையத்தில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.

