பொங்கல் பரிசாக ரூ.1000 குடும்ப கட்டைதாரர்களுக்கு வழங்க முடிவு; புதுச்சேரி அரசு அசத்தல் அறிவிப்பு

அரசியல் இந்தியா கடந்த நிகழ்ச்சிகள் செய்திகள் நிகழ்வுகள் பண்டிகைகள் மற்றும் கொண்டாட்டங்கள் மற்றவை முதன்மை செய்தி வரும் நிகழ்ச்சிகள்

2024-ஆம் ஆண்டு தைப் பொங்கல் பண்டிகையைச் சிறப்பாகக் கொண்டாடும் வகையில், அனைத்து சிவப்பு ரேஷன் கார்டுகளுக்கு ரூ.1000/- வழங்கப்படும் என்று புதுச்சேரி அரசு தெரிவித்துள்ளது. இதனால் ஒரு லட்சத்து 30 ஆயிரத்து 791 அட்டைதாரர்கள் பயன்பெறுவார்கள் என்றும் கூறப்பட்டுள்ளது.

இதுகுறித்து, வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:

மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறையினால் செயல்படுத்தப்பட்டு வரும், ஏழை மக்களுக்கான இலவச துணி வகைகள் வழங்கும் திட்டத்தின் கீழ், புதுச்சேரி குடிமைப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் விவகாரங்கள் துறையால் வழங்கப்பட்ட வறுமைகோட்டிற்கு கீழ் வசிக்கும் குடும்ப உணவு பங்கீட்டு அட்டைதாரர்களில் அட்டவணை/பழங்குடியினர் இனமக்கள், மீனவர், நெசவாளர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் தவிர புதுச்சேரி ஒன்றியத்தில் உள்ள 1,30,791 வறுமைகோட்டிற்கு கீழ் வசிக்கும் குடும்ப உணவு பங்கீட்டு அட்டைதாரர்களில் ஓர் நபர் கொண்ட அட்டைதாரர்களுக்கு ரூ.500 மற்றும்
இரண்டிற்கு மேற்பட்ட குடும்ப நபர்களை கொண்ட அட்டைதாரர்களுக்கு ரூ.1,000 விதம் நேரடி பணப் பரிமாற்றத்தின் (DBT) மூலம் 04.01.2024 அன்று பயனாளர்களின் வங்கி கணக்கில் செலுத்தப்படும். இதன் மூலம் ரூ.12.29 கோடி அரசாங்கம் செலவிடுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *