The Rise அமைப்பின் சார்பாக பேசிய ம. ஜெகத் கஸ்பர் அவர்கள் கூறுகையில், மும்பை பெருநகரில் சுமார் 15 லட்சம் தமிழர்கள் வாழ்கிறார்கள். எனக்கும் The RISE – எழுமின் அமைப்பிற்கும் மும்பை தமிழர்களுக்கும் நேற்று முதற் சந்திப்பு. பெரிய எதிர்பார்ப்புகள் இருக்கவில்லை. அதுவும் நவராத்திரி நிறைவு நாள் என்பதால் ஆகக் குறைந்த எதிர்பார்ப்புகூட இல்லை. ஆனால் 13 உலக மாநாடுகள் நடத்தி முடித்துவிட்ட The RISE எழுமின் அமைப்பின் விரல்விட்டு எண்ணத்தக்க வெகுசில சிலிர்ப்பூட்டும் சந்திப்புகளில் ஒன்றாக நேற்றைய The RISE – மும்பை தொடக்க விழா அமைந்தது.வந்திருந்த ஒவ்வொருவரும் தமிழ் நன் முத்துக்கள். அதனிலும் பெரிது அவர்களிடம் வெளிப்பட்ட நேர்மையும் உண்மையுமான ஆர்வம். The RISE போன்றதொரு அமைப்பிற்காகத்தான் எதிர்நோக்கியிருந்தோம் என்பதான உணர்வெழுச்சி. காத்திருந்த ஆயிரம் கனவுகளின் ஒருநேரக் கண்விழிப்பு போல உணர்ந்தோம். கருமேகங்களைக் கிழித்து வானைத் தொடும் ஆற்றல் கொண்டவர்களாய் மும்பைத் தமிழர்களைக் கண்டோம். பேரானந்தம் கொண்டோம். பெங்களூர் The RISE தமிழர் போல் மும்பையிலிருந்தும் மிகப்பெரிய எண்ணிக்கையில் தொழில் – வணிக – திறன்சார் தமிழர்கள் சென்னை மாநாட்டிற்கு வருகிறார்கள். பெருமகிழ்ச்சி!வழித்தடம் சமைத்த நல்ல தமிழர்- மனிதர் திரு. சாம்சன் அவர்களுக்கும், அவரை அறிமுகப்படுத்திய துபாய் தமிழர் திரு. கிரகரி கிளீட்டஸ் அவர்களுக்கும், உடன் வந்த மூத்த நல்லவர் திரு. முருகன் அய்யா அவர்களுக்கும், வழிகாட்டுதல் தந்த திரு. ஜோயல் அகிலன் அவர்களுக்கும், உழைத்த திரு. விமல் கிறிஸ்டபர் உள்ளிட்ட பலருக்கும், நேற்றைய நாளின் அற்புதமான மும்பைத் தமிழர்களுக்கும் எமது நெஞ்சார்ந்த நன்றிகள். பெரிதனும் பெரிதாய் எழுமின் மும்பை நகரிலும் எழும். இது நமது காலம். தமிழர் தலைநிமிர் காலம்!தமிழ்ப்பணி என்று அவர் உரையை நிறைவு செய்தார்.

