சத்தீஸ்கரில் மாவோயிஸ்ட்கள் புதைத்து வைத்திருந்த குண்டு வெடித்து சிதறியது; 2 பாதுகாப்புப் படை வீரர்கள் உயிரிழந்த அதிர்ச்சி சம்பவம்

அரசியல் இந்தியா கடந்த நிகழ்ச்சிகள் செய்திகள் நிகழ்வுகள் மற்றவை முதன்மை செய்தி விபத்துகள்

சத்தீஸ்கரில் மாவோயிஸ்ட்கள் புதைத்து வைத்திருந்த குண்டு வெடித்து சிதறியதில் பாதுகாப்பு படையை சேர்ந்த 2 வீரர்கள் உயிரிழந்தனர்.
சத்தீஷ்கரில் மாவோயிஸ்டுகள் மற்றும் நக்சலைட்டுகளின் ஆதிக்கம் பரவலாக பல இடங்களில் காணப்படுகிறது. அவ்வப்போது வன பகுதியில் இருந்து ஊருக்குள் புகுந்து, அரசியல்வாதிகள், பாதுகாப்பு படை உள்ளிட்டோர் மீது தாக்குதல்களும் நடத்தப்படுவதுண்டு.
இந்த நிலையில், எல்லை பாதுகாப்புப் படை, இந்தோ-திபெத்திய எல்லை பாதுகாப்புப் படை மற்றும் போலீஸ் அடங்கிய குழுவானது மாநிலத்தின் துபேடா பகுதியில் இருந்து நாராயணன்பூருக்கு திரும்பிக்கொண்டிருந்தனர். அப்போது, அபுஜ்மத் பகுதியில் உள்ள கொட்லியார் கிராமத்திற்கு அருகே அவர்கள் வந்துகொண்டிருந்தபோது மாவோயிஸ்டுகள் புதைத்து வைத்திருந்த ஐஇடி குண்டு திடீரென வெடித்துச் சிதறியது.
இதில், இந்தோ-திபெத்திய எல்லை காவல்படையை சேர்ந்த மகாராஷ்டிராவின் சதாராவைச் சேர்ந்த அமர் பன்வார் மற்றும் ஆந்திராவின் கடப்பாவைச் சேர்ந்த கே. ராஜேஷ் ஆகிய இருவரும் உயிரிழந்தனர். மேலும் இருவர் படுகாயமடைந்தனர். தாக்குதலில் காயமடைந்த நாராயண்பூர் காவல்துறையைச் சேர்ந்த இரண்டு காவலர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தொடர்ந்து அப்பகுதியில் தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *