டி20 இந்திய அணியில் வைபவ் சூர்யவன்ஷி இடம்பெற்றுள்ளார்;ஸ்ரேயஸ் ஐயர் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்

உலகம் நிகழ்வுகள் மற்றவை வரும் நிகழ்ச்சிகள்

செப்டம்பரில் நடைபெறும் ஆசிய கோப்பை மற்றும் அயர்லாந்து, இங்கிலாந்து தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. டி20 தொடரில் இந்திய அணியின் கேப்டனாக இருந்த சூர்யகுமார் யாதவ் நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக ஸ்ரேயஸ் ஐயர் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.
அதேபோல், சூர்யகுமார் யாதவ் கேப்டன் பொறுப்பில் மட்டுமல்ல, ஆடும் லெவனிலும் இருந்தும் நீக்கப்பட்டுள்ளார். இதற்கிடையே, இந்திய அணியில் வைபவ் சூர்யவன்ஷி இடம்பெற்றுள்ளார். இந்த மூன்று தொடர்களிலும் வைபவ் இந்திய அணியில் இடம்பெற்றுள்ளார்.
நடந்து முடிந்த ஐபிஎல் 2026 சீசன் முடிவடைந்த நிலையில், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் 15 வயது இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷி ஒட்டுமொத்த கிரிக்கெட் உலகின் கவனத்தையும் ஈர்த்தார். இந்த சீசனில் எதிர்பார்ப்புகளையும் மீறி நம்பமுடியாத ஆட்டத்தை வெளிப்படுத்திய அவரை இந்திய அணியில் சேர்க்க வேண்டும் என்ற கோரிக்கைகள் வலுப்பெற்றன.
உலகத்தரம் வாய்ந்த பந்துவீச்சாளர்களுக்கு எதிராக ஆக்ரோஷமாக விளையாடிய வைபவ் டி20 கிரிக்கெட்டின் அடிப்படையை மாற்றிவிட்டார். இந்த சீசனில் 16 போட்டிகளில் சூர்யவன்ஷி எதிர்கொண்ட ஒட்டுமொத்த பந்துகள் 327. எடுத்த ரன்கள் 776. இதையடுத்து அவரை இந்திய அணியில் தேர்வு செய்ய வேண்டும் என கோரிக்கை வலுத்து வந்தது. அதற்கேற்ப தற்போது இந்திய அணியில் இடம்பெற்றிருக்கிறார்.
இதன்மூலம் சச்சின் டெண்டுல்கரின் சாதனை முறியடிக்கப்பட்டுள்ளது. சச்சின் 16 வயதில் இந்திய அணிக்கு தேர்வானதே உலக சாதனையாக இருந்தது. தற்போது 15 வயதில் தேசிய அணியில் இடம்பிடித்து வைபவ் சூர்யவன்ஷி புதிய உலக சாதனை படைத்திருக்கிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *