ஐபிஎல் 2025-ல் 35 பந்துகளில் சதம் அடித்து 14 வயதான வைபவ் சூர்யவன்ஷி சாதனை.

இந்தியா உலகம் ஐபிஎல் தொடர் சிறப்பு செய்திகள் பொழுதுபோக்கு விளையாட்டு

2025 ஆம் ஆண்டு நடைபெறும் ஐபிஎல் சீசனில் குஜராத் அணிக்கு எதிரான போட்டியில், ராஜஸ்தான் அணியின் 14 வயது வீரரான வைபவ் சூர்யவன்சி 35 பந்துகளில் சதம் அடித்து சாதனை படைத்துள்ளார். இதன் மூலம், டி20 கிரிக்கெட்டில் அதிவேக சதம் அடித்த இந்திய வீரராக மாறியுள்ளார். ஐபிஎல் வரலாற்றில் கெயிலுக்கு பிறகு, அதிவேகமாக சதம் அடித்த வீரர் என்ற பெருமையும் இவருக்கு கிடைத்துள்ளது. 17 பந்துகளில் அரை சதம் அடித்ததன் மூலம், டி20 போட்டிகளில் அதிவேக அரை சதம் அடித்த இளம் வீரராக சூரியவன்சி உள்ளார். முதலில் பேட்டிங் செய்த குஜராத் அணி நான்கு விக்கெட்டுகளை இழந்தது 209 ரன்கள் எடுத்தது. பின்னர் 210 ரன்கள் அடிக்க வேண்டும் என்ற கடின இலக்குடன், ராஜஸ்தான் அணி களமிறங்கியது. ராஜஸ்தான் அணியின் 14 வயது வீரர் சூரியவன்ஷி மற்றும் நட்சத்திர வீரர் ஜெய்ஸ்வால் இணைந்து குஜராத் அணியின் பந்துவீச்சை முறியடித்தனர். 14 வயதான வைபவ் சூரியவன்ஷி முஹம்மது சிராஜ், இஷாந்த் ஷர்மா, பிரசித் கிருஷ்ணா, ரசீத்கான், வாஷிங்டன் சுந்தர் போன்ற சர்வதேச பந்துவீச்சாளர்களின் பந்தில் அதிரடியாக விளையாடி, 35 பந்துகளில் சதம் அடித்து அசத்தினார். ஐபிஎல் வரலாற்றில் 2வது அதிவேக சதம் இதுவே ஆகும். டி20 வரலாற்றில் சதம் அடித்த இளம் வீரர் என்ற பெருமையை சூர்யவன்ஷி பெற்றுள்ளார். அவர் 38 பந்துகளில் 101 ரன்களை குவித்துள்ளார், இதில் 7 பவுண்டர்கள் மற்றும் 11 சிக்சர்கள் அடங்கும். அதிவேக சதம் அடித்த வைபவ் சூர்யவன்ஷிக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *