உக்ரைனுக்கும் ரஷ்யாவுக்கும் இடையேயான போர் 3வது ஆண்டிற்கும் மேலாக நீடித்து வருகிறது, இதில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். அமெரிக்க அதிபர் டிரம்ப் இந்த போரின் முடிவுக்கு முயற்சி மேற்கொண்டுள்ளார். இந்நிலையில், 2ம் உலக போரின் 80வது ஆண்டு தினத்தை முன்னிட்டு, மே 8 முதல் 10ம் தேதி வரை தற்காலிகமாக போர் நிறுத்தம் செய்வதாக ரஷ்ய அதிபர் புடின் அறிவித்துள்ளார். இந்த போர் நிறுத்தம் மே 8ம் தேதி நள்ளிரவில் இருந்து 10ம் தேதி வரை அமலில் இருக்கும் என ரஷ்யா தெரிவித்துள்ளது.

