மேற்கு வங்க முதல்வர் மம்தா பேனர்ஜி பயணித்த கார் விபத்துக்குள்ளானது; தலையில் சிறு காயத்துடன் தப்பினார்

அரசியல் இந்தியா கடந்த நிகழ்ச்சிகள் செய்திகள் நிகழ்வுகள் மற்றவை முதன்மை செய்தி விபத்துகள்

கொல்கத்தாவில் விபத்தின்போது தன் காரில் பிரேக் பிடிக்காமல் இருந்திருந்தால் இறந்திருப்பேன் என்று மம்தா பேட்டி அளித்துள்ளார். பர்த்வானில் இருந்து கொல்கத்தா செல்லும் வழியில் தமது கார் மீது மோதுவது போல் எதிரே ஒரு கார் வந்ததாக மம்தா தகவல் தெரிவித்துள்ளார். தன் கார் மீது மோதுவது போல் எதிரே கார் வந்ததாகவும் உடனடியாக தமது ஒட்டுநர் பிரேக் போட்டதால் உயிர் பிழைத்தேன். பிரேக் போட்ட வேகத்தில் தனது தலை காரின் முன்பகுதியில் மோதி ரத்தம் வந்ததாக மம்தா பானர்ஜி தகவல். உடனடியாக காரை நிறுத்தி ஜன்னலை திறந்ததாகவும் அதனால்தான் உயிர்பிழைத்ததாகவும் விபத்து தொடர்பாக சட்டம் தனது கடமையைச் செய்யும் என்று மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி உறுதி அளித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *