நாடு முழுவதும் 96.88 கோடி பேர் வரும் நாடாளுமன்றத்தேர்தலில் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர் என்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. கடந்த 2019 நாடாளுமன்ற தேர்தலைவிட வரும் நாடாளுமன்றத் தேர்தலில் 6 சதவீதம் வாக்காளர்கள் அதிகம் உள்ளனர்.ஆண் வாக்காளர்கள் 49.7 கோடி, பெண் வாக்காளர்கள் 47.1 கோடி, மூன்றாம் பாலினத்தவர் 48,044 பேரும் மாற்றுத்திறனாளிகள் 88.35 லட்சம் பேர் உள்ளனர். புதிய வாக்காளர்கள் எண்ணிக்கை 2.63 கோடியாக உள்ளது. புதிய வாக்காளர்களில் 1.41 கோடி பேர் பெண்கள், 1.22 கோடி பேர் ஆண்கள் ஆவர். 17 வயது நிறைவடைந்த உடனேயே வாக்காளராக பதிவு செய்தவர்கள் 10.64 லட்சம் பேர் விண்ணப்பித்தனர்.2019ம் ஆண்டில் மொத்தம் 89.6 கோடி பேர் வாக்களிக்க தகுதி பெற்றனர். 2024ம் ஆண்டில் 6 சதவீதம் உயர்ந்து 96.8 கோடி பேர் தகுதி பெற்றனர். 2019ம் ஆண்டில் ஆண் வாக்காளர்கள் 46.5 கோடியாகவும், 43.1 கோடி பெண் வாக்காளர்கள் ஆகவும் இருந்தனர். தற்போது 2024ம் ஆண்டில் 49.7 கோடி பேரும், பெண் வாக்காளர்கள் 47.1 கோடியாக தகுதி பெற்றுள்ளனர். 2019ம் ஆண்டில் 39,683 பேராக இருந்த மூன்றாம் பாலினத்தவர்கள் தற்போது 2024ம் ஆண்டில் 48,044 பேராக உள்ளனர்.

