வாடகைத் தாய் மூலம் குழந்தை பெற்றால் 270 நாட்கள் விடுமுறை – தமிழக அரசு அறிவிப்பு

அரசியல் செய்திகள் தமிழ்நாடு மருத்துவம்

வாடகை தாய் மூலம் குழந்தை பெற்றுக்கொள்ளும் அரசு பெண் ஊழியர்களுக்கு 270 நாட்கள் விடுமுறை அளிக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
குழந்தை பெற தகுதி இல்லாதவர்கள் வாடகைத்தாய் மூலம் குழந்தை பெற்றுக் கொள்ளலாம் என்றும் அதற்கான விதிகளை பின்பற்ற வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது என்பது தெரிந்ததே.
இந்த நிலையில் அரசு பெண் ஊழியர் ஒருவர் வாடகை தாய் மூலம் குழந்தை பெற்றுக் கொண்டால் அந்த குழந்தையை பராமரிக்க அரசு பெண் ஊழியர்களுக்கு 270 நாட்கள் விடுமுறை வழங்கப்படும் என தமிழ்நாடு அரசு சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைகள் துறை அறிவிப்பு செய்துள்ளது.
வாடகைத் தாய் மூலம் குழந்தைகள் பெறுவது தற்போது அதிகரித்து வருகிறது. அவ்வாறு குழந்தைகள் பெறும் அரசுப் பெண் பணியாளா்கள் மற்றும் ஆசிரியா்களுக்கு பச்சிளம் குழந்தைகளை மிகுந்த கவனத்துடன் பராமரிப்பதுடன் அவா்களின் உடனடி தேவைகளை நிறைவேற்றுவதற்காக 270 நாள்கள் குழந்தை பராமரிப்பு விடுப்பு வழங்கப்படும் என்றாா்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *