நாட்டின் தலைசிறந்த கல்வி நிறுவனங்கள் பட்டியல் வெளியீடு – சென்னை ஐஐடி தொடர்ந்து ஐந்தாவது ஆண்டாக முதலிடம்

அரசியல் இந்தியா உயர்கல்வி கடந்த நிகழ்ச்சிகள் செய்திகள் தமிழ்நாடு நிகழ்வுகள் மற்றவை முதன்மை செய்தி

மத்திய அரசு வெளியிட்டுள்ள உயர்கல்வி நிறுவனங்களுக்கான தரவரிசையில் தமிழகத்தைச் சார்ந்த 35 கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் முதல் 100 இடங்களில் இடம் பிடித்துள்ளன. ஒட்டுமொத்த பிரிவில் சென்னை ஐஐடி தொடர்ந்து 5-வது ஆண்டாக முதலிடம் பிடித்துள்ளது.
ஆண்டுதோறும் நாட்டில் உள்ள உயர்கல்வி நிறுவனங்களை மத்திய அரசு தரவரிசை படுத்தி தேசிய தரவரிசை பட்டியலை வெளியிடுகிறது. அந்த வகையில் இந்த ஆண்டுக்கான தரவரிசை பட்டியலை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.
கல்லூரி, பல்கலைக்கழகம், ஆராய்ச்சி நிறுவனம், ஒட்டுமொத்த செயல்பாடு என 4 பிரிவுகளிலும், பாடங்களின் அடிப்படையிலும் பட்டியல் வெளியிடப்பட்டுள்ள நிலையில் சென்னை ஐஐடி, பொறியியல் மற்றும் ஒட்டுமொத்த பிரிவில் முதலிடமும், ஆராய்ச்சி நிறுவனம் பிரிவில் 2 ஆம் இடமும் பிடித்துள்ளது.
பொறியியல் பிரிவில் திருச்சி என்ஐடி 9வது இடத்திலும், வேலூர் இன்ஸ்டியூட் ஆப் டெக்னாலஜி 11-வது இடத்திலும், சென்னை அண்ணா பல்கலைக்கழகம் 13-வது இடத்திலும் உள்ளன. NEXT கட்டடவியல் கல்லூரிகள் பிரிவில், திருச்சி என்.ஐ.டி. 4 ஆம் இடத்தை பிடித்துள்ளது.
மருத்துவக் கல்லூரிகள் பிரிவு பட்டியலில் வேலூர் சி.எம்.சி. 3 ஆம் இடத்தில் உள்ளது. புதுச்சேரி ஜிப்மர் மருத்துவக் கல்லூரி 5 ஆம் இடம் பெற்றுள்ளது. கோவை அமிர்தா வித்யாபீடம் 6வது இடத்திலும், சென்னை மருத்துவக் கல்லூரி 11வது இடத்திலும் உள்ளன. பல் மருத்துவ பிரிவில், சென்னை சவீதா கல்லூரி முதலிடத்தில் உள்ளது. விவசாய கல்லூரி பிரிவில், கோவை அரசு வேளாண் பல்கலைக்கழகம் 5 ஆம் இடத்தில் இடம் பெற்றுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *