உலகின் 50 சிறந்த உணவகங்கள் மற்றும் பார்களின் நிறுவனர்கள் முதல் முறையாக உலகின் சிறந்த 50 ஹோட்டல் மற்றும் பார்கள் பட்டியலை வெளியிட்டுள்ளனர். அதில் முதல் இடம் பிடித்துள்ளது இத்தாலியில் உள்ள லேக் கோமோ அருகில் உள்ள பாசலாக்வா. இந்த பட்டியலில் ஒரே ஒரு இந்திய ஹோட்டல் இடம்பெற்றுள்ளது. அந்த ஹோட்டல் பட்டியல் பற்றி தான் இப்போது பார்க்க இருக்கிறோம்.
இந்த பட்டியலில் ஆக்ராவில் உள்ள ஒபராய் அமர்விலாஸ், 45 ஆவது இடத்தில் உள்ளது. ஆக்ராவில் உள்ள சிறந்த சொகுசு ஹோட்டல், தாஜ்மஹாலில் இருந்து 600 மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது மற்றும் ஒவ்வொரு அறை மற்றும் தொகுப்பிலிருந்தும் உலகின் ஏழு அதிசயங்களில் ஒன்றான தாஜ்மஹாலின் அழகிய காட்சியை பார்த்து ரசிக்க முடியும்.
முதல் இடத்தில் உள்ள பாசலாக்வா பற்றி சொல்ல வேண்டும் என்றால் நெப்போலியன் போனபார்டே, வின்ஸ்டன் சர்ச்சில் மற்றும் வின்சென்சோ பெல்லினி போன்ற புகழ்பெற்ற விருந்தினர்களுக்கு விருந்தளித்து வந்த 18 ஆம் நூற்றாண்டின் கட்டிடம் இது. பல ஆண்டுகளாக மீட்டெடுத்த பிறகு, 24 அறைகள் கொண்ட இந்த சிறிய ஹோட்டல் ஜூன் 2022 இல் திறக்கப்பட்டது.
50 இடங்களில் 21 இடங்களை ஐரோப்பிய ஹோட்டல்கள் ஆக்கிரமித்துள்ளன. அதே சமயம் அமெரிக்கா ஹோட்டல்கள் என்றால் – நியூயார்க் நகரின் அமன் மற்றும் ஈக்வினாக்ஸ் ஆகிய இரண்டு மட்டுமே இந்த பட்டியலில் உள்ளன.இங்கிலாந்தை தளமாகக் கொண்ட வில்லியம் ரீட் பிசினஸ் மீடியாவால் தொகுக்கப்பட்ட பட்டியலில் மேரியட் மற்றும் ஹில்டன் குழுக்களில் இருந்து ஒரு ஹோட்டல் கூட முதல் 50 இடங்களுக்குள் வரவில்லை.
சுதந்திரமான தனி நிறுவனங்களில் ஹோட்டல்கள் பிராண்டட் நிறுவனங்களை விட அதிகமாக இந்த பட்டியலில் இடம்பெற்று உள்ளன. அதேநேரம் மேபோர்ன் ஹோட்டல் குரூப் மற்றும் ஓட்கர் கலெக்ஷன் நிறுவங்களின் மூன்று ஹோட்டல்களை இந்த பட்டியலில் காணலாம்.

