டெங்கு காய்ச்சல் பரவல் தமிழ்நாட்டில் அதிகமிகியுள்ளது; 5000 பேர் பாதிப்பு, பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தல்

ஆரோக்கியம் இந்தியா கடந்த நிகழ்ச்சிகள் செய்திகள் தமிழ்நாடு நிகழ்வுகள் மருத்துவம் மற்றவை முதன்மை செய்தி வரும் நிகழ்ச்சிகள்

அடுத்த 3 மாதங்களில் டெங்கு காய்ச்சல் அதிகரிக்கும் ஆபத்துள்ளதால், தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
சென்னை பெசன்ட் நகரில் டெங்கு காய்ச்சல் விழிப்புணர்வு தொடர்பான துண்டு பிரசுரங்களை வழங்கிய மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன், சிறப்பு மருத்துவ முகாமையும் தொடங்கி வைத்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிர்நாடு முழுவதும் உள்ள மகபேறு மருத்துவமனை வளாகங்களை தண்ணீர் தேங்காமல் இருக்கவும் தொற்று ஏற்படாமல் இருக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்திருக்காதவர்களுக்கு, கடந்த 2 மாதங்களில் மட்டும் சுமார் 15 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக கூறினார்.
டெங்கு பாதிப்பு இந்த ஆண்டு குறைவுதான். இருப்பினும் கடைசி மூன்று மாதங்களில் பாதிப்பு கூடும் என்பதையும் கருத்தில் கொண்டு தடுப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என கூறிய மா.சுப்பிரமணியன், தற்போது 343 பேர் சிகிச்சையில் இருப்பதாக கூறினார்.
இந்த ஆண்டு டெங்கு கட்டுப்பாட்டில் தான் உள்ளது. இறந்தவர்களும் பாதிப்பு ஏற்பட்ட உடனே மருத்துவமனை வராமல் இருந்தது தான் காய்ச்சல் ஏற்பட்ட உடனே அனைவரும் மருத்துவமனை வரவேண்டும் ” என்றும் அவர் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *