டிஎன்பிஎஸ்சி 2024 ஆம் ஆண்டிற்கான தேர்வு அட்டவணை வெளியீடு; தமிழக அரசு தகவல்

அரசியல் இந்தியா கல்வி மற்றும் கல்வி சார்ந்த செய்திகள் செய்திகள் தமிழ்நாடு நிகழ்வுகள் மற்றவை முதன்மை செய்தி வரும் நிகழ்ச்சிகள்

டிஎன்பிஎஸ்சி 2024 ஆம் ஆண்டு தேர்வு திட்ட அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.
டிஎன்பிஎஸ்சி தேர்வர்கள் எதிர்வரும் போட்டித் தேர்வுக்குத் தங்களைத் தயார்படுத்திக் கொள்ளும் வகையில், அரசுப் பணியாளர் தேர்வாணையம் ஒவ்வொரு ஆண்டும் ஆண்டுத் திட்டத்தை வெளியிட்டு வருகிறது.
இந்த ஆண்டு திட்டத்தின் கீழ், எதிர்வரும் ஆண்டில் நடைபெறவுள்ள துறை சார்ந்த தேர்வுகள் குறித்தும் குரூப்- I, II, IV உள்ளிட்ட போட்டித் தேர்வுகள் குறித்தும் விவரங்கள் அடங்கியிருக்கும். மேலும், ஆண்டின் எந்த மாதத்தில் தேர்வு குறித்த அறிவிப்பு (Notification) வெளியாகும், தோராயமான காலியிடங்கள், அதற்கான தேர்வு நடைபெறும் நாள் உள்ளிட்ட விவரங்கள் அறிவிப்பில் இடம்பெறும்.
மேலும், ஆண்டின் எந்த மாதத்தில் தேர்வு குறித்த அறிவிப்பு (Notification) வெளியாகும், தோராயமான காலியிடங்கள், அதற்கான தேர்வு நடைபெறும் நாள் உள்ளிட்ட விவரங்கள் அறிவிப்பில் இடம்பெறும். ஆண்டுக்கான தேர்வு திட்டத்தை டிஎன்பிஎஸ்சி தேர்வாணையம் டிசம்பர் 15ம் தேதி வெளியிட இருப்பதாக கூறப்பட்டது. மேலும், டிஎன்பிஎஸ்சி அட்டவணை விரைவில் வெளியாகும் என தேர்வாணையம் தகவல் தெரிவித்திருந்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *