வடகிழக்கு மாநிலங்களில் மழை மற்றும் வெள்ள பாதிப்பு: அசாமில் மட்டும் 4 லட்சம் மக்கள் தவிப்பு.

இந்தியா இயற்க்கை சுற்றுச் சூழல் செய்திகள் முதன்மை செய்தி வானிலை விபத்துகள்

வடகிழக்கு மாநிலமான அசாம், மேகாலயா, மணிப்பூர், சிக்கிம், மிசோரம் மாநிலங்களில் கடந்த சில நாட்களாக கனமழை கொட்டி வருகிறது. அருணாச்சல் மாநிலத்தில் கனமழையால் இதுவரை 10 பேர் பலியாகி விட்டனர். 23 மாவட்டங்களில் உள்ள 156 கிராமங்கள் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளன. மணிப்பூர் மாநிலத்தில் 19,811 பேர் மழையால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆறுகளில் வெள்ள பெருக்கால் 47 இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இம்பால் கிழக்கு மாவட்டத்தில் வெள்ளப்பெருக்கு அதிகரித்ததால் மருத்துமனையில் இருந்து நோயாளிகள் மாற்றப்பட்டுள்ளனர். அசாம் மாநிலத்தில் வெள்ள பெருக்கு அபாயமாக மாறி உள்ளது. அங்கு பலியானோர் எண்ணிக்கை 10ஆக உயர்ந்துள்ளது. 15 மாவட்டங்கள் வெள்ளத்தில் தத்தளித்து வரும் நிலையில் 4 லட்சம் மக்கள் தவிக்கிறார்கள். மிசோரம் மாநிலத்தில் 3வது நாளாக பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதுவரை 5 பேர் பலியாகி உள்ளனர். 211 இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. மழை மற்றும் வெள்ளப்பெருக்கால் சிக்கிம் மாநிலமும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. அங்கு சுற்றுலா சென்ற 1500 பேர் ஊர் திரும்ப முடியாமல் வடக்கு சிக்கிமில் சிக்கித் தவிக்கிறார்கள். மேலும் ராணுவ முகாமில் நிலச்சரிவு: 3 வீரர்கள் பலி; 6 பேர் மாயம்சிக்கிம் மாநிலம் சேட்டன் பகுதியில் உள்ள ராணுவ முகாமில் ஏற்பட்ட நிலச்சரிவில் 3 வீரர்கள் பலியாகி விட்டனர். 6 பேர் மாயமாகி விட்டனர். 4 பேர் காயங்களுடன் மீட்கப்பட்டுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *