விளையாட்டு வீரர்களுக்கான அர்ஜுனா விருதுகளை மத்திய விளையாட்டுத்துறை அமைச்சகம் அறிவித்தது. கிரிக்கெட்டில் சிறந்த பங்களிப்புக்காக முகமது ஷமிக்கு அர்ஜுனா விருது அறிவிக்கப்பட்டுள்ளது. தடகளத்தில் ஸ்ரீசங்கர், பருல் சதுர்வேதி; வில்வித்தையில் ஜாஸ் ப்ரவின், அதிதி கோபிதந்த் சாமிக்கு விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
மல்லர் கம்பம் விளையாட்டு பயிற்சியாளர் கணேஷ் பிரபாகரன் உள்ளிட்ட 5 பேருக்கு துரோணாச்சாரியார் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. ஹாக்கி, பாரா தடகளம், மல்யுத்தம் ஆகிய பிரிவு பயிற்சியாளர்களுக்கு விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
மேஜர் தயான் சந்த் கேல் ரத்னா விருது சாத்விக் சாய்ராஜ், சிராக் ஷெட்டி ஆகியோருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. ஆசிய பேட்மிண்டன் இரட்டையர் பிரிவில் இருவரும் தங்கம் வென்று வரலாற்று சாதனை படைத்திருந்தனர்.

